Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சஷ்டி விழா நிறைவு: நல்லூர் கந்தனுக்கு திருக்கல்யாணம்

In ஆன்மீகம்
Updated: 04:49 GMT, Nov 19, 2015 | Published: 04:49 GMT, Nov 19, 2015 |
0 Comments
1238
This post was written by : Risha

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு நேற்று (புதன்கிழமை) திருக்கல்யாணம் இடம்பெற்றது.

கடந்த 12ஆம் திகதி கந்தசஷ்டி விழா ஆரம்பமாகியது. கந்தசஷ்டி விரதத்தின் இறுதிநாளான நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பல்வேறு முகங்கள் கொண்ட சூரர்களை வதம் செய்தார். அதனை தொடர்ந்து விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று வள்ளி தெய்வானை சமேத நல்லூர் கந்தனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய் எம்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_1633

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg