Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயிர் ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள்

In
Updated: 06:50 GMT, Nov 19, 2015 | Published: 06:50 GMT, Nov 19, 2015 |
0 Comments
1357
This post was written by :

பிளாஸ்டிக் போத்தல்களினால் பல சின்ன சின்ன உடல்நல கோளாறுகளில் இருந்து உயிரைக் கொல்லும் நோய்களை ஏற்படுத்தும் வரையிலான தன்மைகள் இருக்கின்றன. பிளாஸ்டிக் போத்தல்கள் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது உடல்நலத்திற்கு பல தீங்குகள் ஏற்படுகின்றன. பைசெப்ஃபீனால் ஏ நம் உடலில் நாளமில்லா சுரப்பிகளை பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக நம் உடலில் புற்றுநோய் கட்டிகள் எளிதாக உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு இதன் காரணமாக மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மார்பக புற்றுநோயினால் பல மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பைசெப்ஃபீனால் ஏ எனப்படும் இந்த இரசாயனத்தில் பல வகைகள் இருக்கின்றன இதில் வகை 7 என சொல்லப்படும் இரசாயனத்தின் கலப்பினால், ஆண்களுக்கு விந்தணு வலுவிழப்பது மற்றும் கர்ப்பணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வேலைக்கு செல்லும் அனைவரும் பிளாஸ்டிக் போத்தல்களில்தான் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். ஏன் நாம் கடைகளில் வாங்கும் தண்ணீரும் பிளாஸ்டிக் போத்தல்களில் தான் அடைத்து தரப்படுகிறது.

பெரும்பாலும் தினமும் பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் அருந்துபவர்களுக்கு 2ம் வகை நீரிழிவு நோய் ஏற்படுகிறது அதுவும் இளைய தலைமுறையினருக்கு அதிகமாக இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. பிளாஸ்டிக் போத்தல்களில் அடைத்து வைக்கப்படும் தண்ணீர்களில் மிக வேகமாய் பாக்டீரியாக்கள் உருவாகும். இது நமது வீட்டில் பிடித்து வைக்கப்படும் போத்தல்களில் மட்டுமல்ல, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும போத்தல்களிலும் பாக்டீரியாக்கள் விரைவாக உருவாகிறது.

எனவே, பிளாஸ்டிக் போத்தல்களில் தண்ணீர் பருகுவதை தவிர்த்திடுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg