Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருளைக்கிழங்கு புலாவ்

In
Updated: 07:04 GMT, Nov 19, 2015 | Published: 07:04 GMT, Nov 19, 2015 |
0 Comments
1314
This post was written by :

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 2
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிது
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி – 1 1/2 கப்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 3
ஏலக்காய் – 4
பட்டை – 1
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக்கொள்ளவும். பிறகு புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.

முதலில் அடுக்கை மூட்டி வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, மூடி 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, பின் நன்றாக வெந்ததும் இறக்க வேண்டும்.

அதில் நறுக்கி வைத்துள்ள புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg