Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரட் ஒனியன் பொடிமாஸ்

In
Updated: 07:13 GMT, Nov 19, 2015 | Published: 07:13 GMT, Nov 19, 2015 |
0 Comments
1229
This post was written by :

தேவையான பொருட்கள்

பாண் – 8 துண்டுகள்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 2
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
மிளகு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை ஆகயவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். பாண் துண்டுகளையும் சதுர வடிவில் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பாண் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, கொத்தமல்லியைத் தூவினால், பிரட் ஆனியன் பொடிமாஸ் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg