Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வரும் Huawei

In வணிகம்
Updated: 08:31 GMT, Nov 19, 2015 | Published: 07:23 GMT, Nov 19, 2015 |
0 Comments
1211
This post was written by :

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போனாகத் திகழ்கின்ற Huawei தென்கிழக்காசிய சந்தைகள் தொடர்பான சமீபத்தைய அறிக்கையொன்றின் பிரகாரம், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஒக்டோபர் நிறைவில் 140 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்பதாக செப்டெம்பரில் வெளியிட்ட அறிக்கையொன்றில் 2015 ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 300வீதம் என்ற விற்பனை வளர்ச்சியை அடையப்பெற்றுள்ளதாக Huawei  ஸ்ரீPலங்கா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது 2012 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை தொழிற்பாடுகளை ஆரம்பித்த பின்னர் விற்பனை அளவைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த ஆண்டாகவும் அமைந்துள்ளது. 2015 ஒக்டோபர் நிறைவில் தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான Huawei இன் உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியூ கருத்துத் தெரிவிக்கும் போது, இது Huaweii நிறுவனத்திற்கும், இலங்கையிலுள்ள எமது நுகர்வோர் அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு காலகட்டமாக அமைந்துள்ளது. எமது சேவை வழங்கல் மீது நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி, நாடெங்கிலுமுள்ள எமது நுகர்வோரை எட்டும் வகையில் சிங்கருடனான எமது பிரத்தியேக விநியோக முகவராண்மை மூலமாக அந்த நிறுவனத்துடன் ஒன்றிணைந்து தொழிற்படுவோம் என தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg