Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் அறிமுகமாகியுள்ள Micromax Canvas Express

In வணிகம்
Updated: 07:40 GMT, Nov 19, 2015 | Published: 07:40 GMT, Nov 19, 2015 |
0 Comments
1218
This post was written by :

உலகின் 10ஆவது சிறந்த கையடக்க தொலைபேசி தயாரிப்பாளரும், இலங்கையில் பெருமளவு கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனமுமான Micromax Informatics  லிமிட்டெட், அண்மையில் Canvas Express  கையடக்க தொலைபேசிகளை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது.

இந்த புதிய 3பு ஸ்மார்ட்போன் வலிமையான புரொசெசர் மற்றும் புத்தாக்கமான உள்ளம்சங்களையும் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தலைமைத்துவமான நிலையை எய்துவது எனும் Micromax  இன் அர்ப்பணிப்பான செயற்பாட்டை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

பல்-செயற்பாடுகளை மேற்கொள்ளும் சாதனங்கள், 24×7 டேடா இணைப்பு மற்றும் real-time mobility  தீர்வுகளை பெருமளவில் நாடும் நுகர்வோரை இலக்காக கொண்டமைந்துள்ளCanvas Express ஸ்மார்ட்ஃபோன், 1.4 GHz Octa Core புரொசெசர் 13 MP கமரா, 5 அங்குல HD IPS  திரை, Wifi, Bluetooth , V 4.0 மற்றும் மேலும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

2015 நவம்பர் 4ஆம் திகதி முதல் இணையத்தளத்தில் நம்பமுடியாத 16,490 ரூபா எனும் விலையில் Micromax Canvas Express தரப்படுத்தப்பட்டுள்ளது.
Canvas Express  இல் காணப்படும்ultra-fast, 1GB LPDDR3 RAM, 88GB RAM ஆகியவற்றின் மூலமாக உயர்ந்த வினைத்திறன் வழங்கப்படுகின்றன. அதிகளவு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு மிருதுவான கையாள்கையையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

 Android KitKat  4.4.2 இல் இயங்குவதுடன், விரைவில் Android Lollipop 5.0 க்கு மெருகேற்றம் செய்து கொள்ளவும் முடியும்.ஸ்மார்ட்போனின் மெல்லிய கட்டமைப்பில் 2500 mAh திறன் வாய்ந்த பற்றரி அடங்கியுள்ளது, இதன் மூலமாக 9.5 மணித்தியாலங்கள் உரையாடக்கூடிய காலமும், 393 மணித்தியாலங்கள் Standby இல் காணப்படும் திறனும் கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg