Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனதை நெருடும் உயிர்ச்சூறை (காணொளி பாடல்)

In
Updated: 11:17 GMT, Nov 19, 2015 | Published: 11:17 GMT, Nov 19, 2015 |
0 Comments
1555
This post was written by : Varothayan

கடந்த 1990ம் ஆண்டு அனலை தீவிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகப் புறப்பட்டவர்களில் 66 உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் 25வது ஆண்டு நினைவையொட்டி வெளியிடப்பட்டிருக்கும் காணொளிப்பாடல் ‘உயிர்ச்சூறை’.

பெண் இயக்குனர் ஷாலினி சார்லஸ் இயக்கியிருக்கும் இந்த பாடலுக்கான இசையை பிரியன் அமைத்திருப்பதோடு, அனலை சிவம் வரிகளை எழுத, ஹரிகாலன், மேரி பாடியுள்ளனர்.

மனதை நெருடும் விதமாக பாடலுக்கான இசை, பாடல் வரிகள் மற்றும் பாடியவர்களின் குரல்கள் அமைந்திருக்கின்றன.

பாடலின் தரத்தை கெடுக்காத விதமாக காட்சியாக்கிய விதம் அழகு. நிரோஷ் மற்றும் துஷிகரனின் கமெராவுக்குள் அனலை தீவும், அதன் அழகும் சிக்கிக் கொண்டது.

சிறிய தீவாக காணப்படும் அனலை தீவில் ஒட்டுமொத்த பரப்பையும் ஒரே ஷாட்டில் காட்டியமை அபாரம்.

கைதேர்ந்த நடிகர் மதிசுதாவையும், துணை நடிகர்களையும் வைத்துக் கொண்டு 25 ஆண்டுகளுக்கு முந்தைய துயரத்தை எம் கண்முன் கொண்டு வந்திருக்கின்றார் இயக்குனர் ஷாலினி.

காதல், டூயட் என சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் ஈழ சினிமாவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் பாடல்களில் குறிப்பிடத்தக்க வித்தியாசமான பாடலாக ‘உயிர்ச்சூறை’ அமைந்திருக்கின்றது. பாராட்டுக்கள் பாடல் குழுவினருக்கு..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg