Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உமா மகேஸ்வரிப்பூஜை

In ஆன்மீகம்
Updated: 05:22 GMT, Nov 22, 2015 | Published: 05:22 GMT, Nov 22, 2015 |
0 Comments
1307
This post was written by :

புரட்டாசி, பௌர்ணமி தினத்தில் வரும் உமாமகேஸ்வர விரதம். அம்மையும் அப்பனுமாகி அண்டமெல்லாம் படைத்து, காத்து அருள்சுரந்தருளி, இம்மைக்கும் மறுமைக்கும் தோன்றாத் துணையாய் துலங்கி நிற்கும் உமாபதியின் மகிமை போற்றும் இவ்விரதத்தைக் கடைபிடித்து வேண்டுவன அடையலாம்.

இந்த விரதத்தை ஆரம்பித்து பதினாறாவது வருட முடிவில், பதினாறு கலசங்களை ஸ்தாபனம் செய்து, அவற்றின் மேல் வெள்ளித் தகட்டாலான பிரதிமைகளை வைத்து, நான்கு கால பூஜைகளைச் செய்ய வேண்டும். நான்கு கால பூஜைகளுக்கும், இயன்ற நிவேதனங்களைச் செய்து நைவேத்தியம் செய்த பிறகு, நிவேதனங்களை, நான்கு வைதீகர்களுக்குத் தானம் செய்வது சிறப்பு.

மறுநாள் புனர் பூஜை செய்து, கலச நீரை அபிஷேகம் செய்து கொண்ட பிறகு, கலசங்களை 16 வைதீகர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். பின், சௌகரியம்போல், பஞ்சதானம், தசதானம் இவற்றைச் செய்யலாம். சிலர் விசேஷமாக, பதினாறு வித தானம் செய்கிறார்கள். அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வருட முடிவிலும், தம்பதி பூஜை செய்வது சிறப்பு. சிலர் பதினாறாவது வருட முடிவில், பதினாறு தம்பதிகளை வைத்துப் பூஜிப்பார்கள். இயலாதவர்கள், முதல் வருடத்திலும், நிறைவு செய்யும் வருடத்திலும் தம்பதி பூஜையைச் செய்யலாம்.

(தானங்களுக்கும் தம்பதி பூஜைக்கும் தேவையானவை, ரிஷி பஞ்சமி விரதத்திற்கு செய்வது போல்தான்). பின், விரதத்தில் பங்குபெற்றோர், விருந்தினர்கள் அனைவரும் உணவு உண்ட பிறகு, விரதம் எடுத்தவர்கள் உணவு உண்ணலாம். உமா மகேஸ்வர விரதத்தைக் கடைப்பிடித்து, ஸ்ரீ உமா மகேஸ்வரரைப் பூஜித்து, வெற்றி பெறுவோம்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg