Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஞ்சி கறி

In
Updated: 08:55 GMT, Nov 22, 2015 | Published: 06:45 GMT, Nov 22, 2015 |
0 Comments
1412
This post was written by :

தேவையான பொருட்கள் :

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 4
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க:
கடுகு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி – 50 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கறிவேப்பிலை – 2 கைப்பிடி
நல்லெண்ணெய் – 1 குழி கரண்டி
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.  இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். வறுக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விட்டு பக்குவமாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை, சேர்த்து வதக்கவும்.

நீர்க்கக் கரைத்த புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். இந்தக் குழம்பை மண்சட்டியில் வைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg