Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீடு அமைப்பிலுள்ள தோஷம் நீங்க பரிகாரம்

In ஆன்மீகம்
Updated: 04:55 GMT, Nov 23, 2015 | Published: 04:55 GMT, Nov 23, 2015 |
0 Comments
1967
This post was written by : Elakkiya

வாஸ்து தோஷம், முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு, அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதில் இருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும். எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விஷயமே நடக்காது

எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் ஏதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும்
இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு வைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.

90 நாள் என்பது ஒரு கணக்கு தான், எமக்கு இப்போது ஓரளவு பரவாயில்லை, பிரச்சனை இல்லை என உணரும் வரை விளக்கு போட வேண்டும். வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம். இது அவர் அவர் விருப்பம். இதனால் எந்த கெடுதலும் வராது.

ஒருவேளை வீட்டு வளவுக்குள் விளக்கு வைப்பதில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம். (விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை).

விளக்கு ஏற்றும் போது வைரவர் கவசம் அல்லது வைரவர் காயத்ரி அல்லது வைரவர் ஸ்லோகம் அல்லது வைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்ற வேண்டும். இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் வைரவர் கோவிலுக்கு சென்று வழிபாடு வெற்றி அடைய விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி பின்னர் வைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்ற பிறகு வீட்டுற்கு வந்து விநாயகரை வணக்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே வைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்.

இந்த வழிபாட்டினை ஆரம்பிப்பதற்கு தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், பௌர்ணமி போன்ற நாட்கள் மிகவும் உகந்தவை. அப்படியும் இல்லையென்றால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் அந்த நாட்களில் ஆரம்பிக்கலாம்.

நிச்சயம் இவ்வழிபாட்டினை செய்பவர் வீட்டில் அனைத்து மங்களமும் உண்டாகும்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg