Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் உயர்வு

In வணிகம்
Updated: 08:33 GMT, Nov 23, 2015 | Published: 08:32 GMT, Nov 23, 2015 |
0 Comments
1196
This post was written by : Elakkiya

வர்த்தக தொடக்கத்தில் இன்று காலை சென்செக்ஸ் 90 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் குறியீடு 385.97 புள்ளிகளாக உயர்ந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 89.55 புள்ளிகள் உயர்ந்து 25,958.04 புள்ளிகளாக உள்ளது.

மூலதன பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், மின்சாரம் மற்றும் சுகாதாரம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.62% வரை அதிகரித்திருந்தது.

தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் 15.70 புள்ளிகள் அதிகரித்து 7,872.25 புள்ளிகளாக உள்ளது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டு குறியீடு 0.51% , ஹாங்காங்கின் ஹாங் செங் 0.10% உயர்ந்து காணப்பட்டது. ஜப்பான் பங்குச்சந்தைகளுக்கு இன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.51% உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg