Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சென்னா ரசம்

In
Updated: 06:39 GMT, Nov 24, 2015 | Published: 06:39 GMT, Nov 24, 2015 |
0 Comments
1310
This post was written by :

சென்னா என்றால் கடலை. கடலையை அவித்து உண்பதை விட இந்த ரசத்தில் கடலை அவித்த நீரும் ஊற்றி இதில் சென்னாவும் சேர்த்திருப்பதால் புரதச்சத்து நிறைந்து இருக்கிறது. காலை வேளையில் இதை சூப் ஆகவும் பருகலாம்

தேவையான பொருட்கள்:

ஊற வைத்து வேகவைத்த கடலை – அரை கப்,
தக்காளி – 2,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் – 2,
மல்லி – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறு துண்டு,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
வெந்தயம் – கால் டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பூண்டு (விருப்பப்பட்டால்) – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

• பொடிக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

• தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• வேக வைத்த சென்னாவை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும்.

• சொன்ன வேக வைத்த தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டி, அரைத்த சென்னாவுடன் சேர்க்கவும்.

• மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.

• அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களை சேர்த்து தாளித்து, சென்னா கரைசலை அதில் ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் பொடித்த பொடியை தூவி இறக்கவும்.

• இதை வடிகட்டி ‘சூப்’பாகவும் குடிக்கலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg