Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிவ் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் பெறும் நன்மைகள்

In
Updated: 05:03 GMT, Nov 29, 2015 | Published: 06:40 GMT, Nov 25, 2015 |
0 Comments
4910
This post was written by : Anojkiyan

எண்ணெய்களிலேயே ஓலிவ் எண்ணெயில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய ஓலிவ் ஓயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம். இங்கு தினமும் இரவில் ஓலிவ் ஓயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் பெறும் நன்மைகள் பட்டியலிடபபட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, தினமும் ஓலிவ் ஓயில் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள்.

புத்துணர்ச்சியான சருமம்: ஓலிவ் ஓயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஓலிவ் ஓயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

தழும்புகள் மறையும்: முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து, அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஓலிவ் ஓயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.

முதுமைத் தோற்றம் தடுக்கப்படும்: தினமும் ஓலிவ் ஓயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஓலிவ் ஓயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

வறட்சியைத் தடுக்கும்: உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஓலிவ் ஓயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்

பொலிவு அதிகரிக்கும்: பொதுவாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஓலிவ் ஓயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தைப் பெறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg