Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயத்திரதன்

In ஆன்மீகம்
Updated: 08:53 GMT, Nov 25, 2015 | Published: 08:53 GMT, Nov 25, 2015 |
0 Comments
1232
This post was written by : Anojkiyan
kurukshetra_mini

ஜெயத்திரதன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். சிந்து நாட்டு அரசன் மற்றும் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ‘இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ‘என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான்.

முன் வரலாறு

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது,திரௌபதி தனித்து இருந்தாள்.அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.

வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை கொண்டு ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவனை மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்ரதன்,கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான்.கண்ணனின் துணையிருப்பதால்,பாண்டவர்களை வெல்ல முடியாது. ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை அவனுக்கு அளிக்கிறார்.இந்த வரம் குருச்சேத்திரப் போரில் பதின்மூன்றாம் நாள் போரில் பயனாகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg