Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சில நிமிடத்தில் சரும பொலிவை அதிகரிக்க டிப்ஸ்

In
Updated: 05:03 GMT, Nov 29, 2015 | Published: 09:01 GMT, Nov 27, 2015 |
0 Comments
1543
This post was written by : Anojkiyan

டீ மாஸ்க் : சிறிது நீரில் 2 டீஸ்பூன் தேநீர் இலைகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை : 2 டீஸ்பூன் சர்க்கரையில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையைக் கொண்டு, முகம், கை, கால்களில் மசாஜ் செய்து 7 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, அப்பகுதிகளில் உள்ள இறந்த செல்கள் முழுவதும் வெளியேறி, உடனடி பொலிவு கிடைக்கும்.

ஒரஞ்ச் மாஸ்க் : சிறிது ஒரஞ்ச் தோலை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழுத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பளிச்சென்று காணப்படும்.

மஞ்சள் தூள் மற்றும் ஒரஞ்ச் ஜூஸ் : 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரஞ்ச் ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலை : கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் முல்தானி மெட்டி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ, முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை துண்டுகளாக்கி, அந்த துண்டுகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால், உடனடிப் பொலிவைப் பெறலாம்.

மல்லிகை : மல்லிகைப் பூக்களை அரைத்து, அதில் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, அக்கலவைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து 10 நிமிடம் கழித்து கழுவ, முகம் பிரகாசமாக காணப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg