Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

In
Updated: 09:21 GMT, Nov 27, 2015 | Published: 09:21 GMT, Nov 27, 2015 |
0 Comments
1408
This post was written by : Anojkiyan

பித்தம் குறையும் : நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

தலைவலி குறையும் : வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்க வெகுவாக உதவுகிறது என்று கூறப்படுகிறது.

ஆசனக் கடுப்பு : வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

வாய் சார்ந்த பிரச்சனைகள் : வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

உடல் வலிமை : வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை அதிகமாகும்.

இதர நன்மைகள் : வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும். வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே உடல் பருமனாக உள்ளவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம். மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg