Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நலம் பெருக அம்பிகையின் வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 10:35 GMT, Nov 27, 2015 | Published: 10:35 GMT, Nov 27, 2015 |
0 Comments
1330
This post was written by : Anojkiyan

தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை அஷ்ட குணங்கள். இந்த எட்டு குணங்களுடன் நாம் வாழும்போதுதான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும். இந்த எட்டு குணங்களையும் பெற்று நாம் சிறப்புற வாழவேண்டுமானால் அதற்கு அஷ்ட ஆத்ம குணங்களின் இருப்பிடமான அம்பிகையைச் சரணடைவதைத் தவிர, வேறு வழி இல்லை. தன்னை ஆத்மார்த்தமாக விரதமிருந்து வழிபடும் பக்தனுக்கு, இந்த குணங்களை தந்து, அவனை உயர்நிலைக்கு இட்டுச் சென்று சந்தோஷம் அளிப்பதே அம்பிகையின் அருள்திறம்.

தேவியின் திருவருளைப் பெற உகந்த மற்றொரு மார்க்கம், வீட்டுப்பெண்களை ஆதிசக்தியாகவே கருதி போற்றுவது. பராசக்தியாகிய அம்பிகையே பெண்கள் வடிவில் ஒவ்வொரு இல்லத்திலும் ஆட்சி செய்கிறாள். பெண்கள் அனைவரும் சக்தியின் வடிவங்கள் என்பதை,

‘தவ தேவீ பேதா: ஸ்த்ரிய: ஸமஸ்தா: ஸகல ஜகத்’

என்ற வேதமந்திரம் உறுதிப்படுத்துகிறது. ஆகவே, குலமங்கையரைப் போற்றுவதால், பராசக்தியின் திருவருளைக் குறையின்றிப் பெறலாம். பராசக்தியிடம் அத்தனை சக்தி இருந்தாலும், தமது சக்தியை அடக்கி ஒடுக்கிக்கொண்டு, ‘ஸதி’ என்ற பெயருடன் மஹா பதிவிரதையாக ஸ்ரீபரமேஸ்வரனின் சாந்தத்தில் தமது மன நிறைவைப் பெறுகிறாள்.

அதனால்தான் அம்பிகைக்கு சிவசக்தி ரூபிணி என்ற பெயரும் வந்தது. இதுபோன்று, குலபத்தினிகளும் தமது கணவன் மூலமாகவே அனைத்துக் காரியங்களையும் செய்து வந்தால், குடும்பத்தில் நலம் பெருகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg