Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணிகள், தோஷங்கள், கண்திருஷ்டிகள் விலக திருஷ்டி கழித்தல் வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 08:37 GMT, Nov 28, 2015 | Published: 08:37 GMT, Nov 28, 2015 |
0 Comments
1796
This post was written by : Anojkiyan

அகங்காரம், ஆணவம், தலைக்கனம், திமிர், இறுமாப்பின் உருவமாகக் கொண்டவன் தக்கன் மற்றும் சூரபதுமன் ஆகும். தக்கன் ஆணவத்திற்கு முழு உருவமாக ஆட்டையும், சூரபதுமன் முழு உருவமாக சேவலையும், எந்த ஒரு குடும்பத்தாரையும் பாதிக்காவண்ணம் இருக்கவே இவ்விரண்டு பிராணியையுமே ஆணவம், அகங்காரச் சின்னமாக ஆடு, கோழி என்றே உருவமான இவ்விரண்டு வாயில்லா ஜீவன்களையும் வெட்டிக் கொள்ளாமல் கோவிலுக்குச் சுற்றிக் கோவிலிலேயே விடுவதாகவே தற்கால வழக்கத்தில் உள்ளது. இவ்வழக்கமே இன்றும் நடைமுறையில் உள்ளது. எலுமிச்சைபழம், தேங்காய், கல்யாண பூசணிக்காய், துமிட்டிக்காய், ஊமத்தங்காய் இவற்றை ஆன்மீக அன்பர்களுக்கு சுற்றி உடைத்தல்! அழித்தல்!

எந்த ஒரு மனிதரைப் பிடித்து இருக்கும் ஆவி மற்றும் ஆன்ம நோய்களான, பிணிகள், பீடைகள், சகடைகள், தோஷங்கள், கண்திருஷ்டிகள், ஓம்பல் போன்ற பீடை நோய்கள் விலக அருளாளர்கள் அல்லது ஆன்மீக அன்பர்கள், சாமியார்கள் அல்லது பூசாரிகள் இவர்களில் யார் வேண்டுமென்றாலும் சாதாரண எலுமிச்சை பழத்தையாவது எடுத்து அதில் சூடம் கொளுத்தி தலையை சுற்றியும், உடல் உறுப்புகளை கை, கால், மார்பு, தோள்பட்டை, தொடை, புஜங்கள் போன்ற உறுப்புகள் அனைத்துக்குமாக ஏற்றியும் இறக்கியும் அதிலே ஆன்ம பிணி, பீடைகளை இறக்கியே அப்பழக்கத்தை அக்காய்களை உடைத்து, பிழிந்து, அழித்து எறிந்து விடுவதாகவுமே தொன்றுதொட்டு இருந்த வண்ணம் வழக்கத்தில் உள்ளது.

அருளாளர், ஆன்மீக அன்பர்கள், பூசாரிகள், இவர்கள் அம்மன் அருளிய அருள்வாக்கின்படி ஆவி, ஆன்மாக்கள் பிடித்த மனிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்குள்ள பிணி, பீடை நோய்களை விரட்ட அல்லது விலக்க பச்சரிசி மாவினால் ஆண்பாவை என்றும் பெண்பாவை என்றும், உருவம் அமைத்து அவ்வுருவ அமைப்பில் நூலை இணைந்து அந்நூலை ஆவி, ஆன்ம நோய் பிடித்தவர்களின் தலைமுடியில் இணைத்து தீயை மூட்டி அத்தீயில் ஆண்பாவை, பெண்பாவை உருவை செய்து அதை 3 வழி கூடும் இடத்தில் வைத்து ஆவி, ஆன்ம நோயை விலக்குவதாகவே உள்ளனர். இதையே கழுப்பு எடுத்தல் அல்லது கழிப்பு விலக்குதல் என்றே கூறுவர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg