Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் பிளாக் ஃபிரைடே மலிவு விற்பனை

In வணிகம்
Updated: 13:17 GMT, Nov 28, 2015 | Published: 11:32 GMT, Nov 28, 2015 |
0 Comments
1332
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவின் பல்வேறு விற்பனை நிலையங்களிலும் கருப்பு வெள்ளி (பிளாக் ஃபிரைடே) மலிவு விற்பனையை முன்னிட்டு பொருள்கள், ஆடைகள் என்பன மலிவாக விற்பனை செய்யப்படுகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இந்த பிளாக் ஃபிரைடே மலிவு விற்பனை வெள்ளி,சனி, ஞாயிறு, திங்கள் என நான்கு நாட்களாக தொடர்ந்திருக்கும் என்று விற்பனை நிலைகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இந்த மலிவு விற்பனைக்காக இரவு 12 மணி வரை சில விற்பனை நிலையங்கள் திறந்திருந்தன. பெரும்பாலான விற்பனை நிலையங்கள் இரவு 9 மணி மற்றும் 10 மணிவரையும் திறந்திருந்ததனையும் அவதானிக்கக் கூடியாதாக இருந்தது.

அதேவேளை இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு திறக்கபட்ட வர்த்தக ஸ்தாபனங்கள் இரவு 7 மணிவரையும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தொடங்கிய பிளாக் ஃபிரைடே மலிவு விற்பனையால் பிரித்தானியாவின் சில்லறை வர்த்தகம் உயர்ந்தாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg