Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெண்ணெய் மிளகு கோழி கறி

In
Updated: 08:39 GMT, Nov 29, 2015 | Published: 06:59 GMT, Nov 29, 2015 |
0 Comments
1392
This post was written by :

தேவையான பொருட்கள்:

கோழி இறைச்சி   – அரை கிலோ
மிளகு –  20
இஞ்சி  –  1 துண்டு
பூண்டு   – 3 பல்
மஞ்சள் தூள்   – அரை  தே.கரண்டி
தணியா தூள்  – 1 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
பெரிய  வெங்காயம்  – 2
வெண்ணெய் – 100 கிராம்
உப்பு   – தேவையான அளவு

செய்முறை:

மிளகைத் தூள் செய்து இஞ்சி, பூண்டு மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து விழுது போல் பிசைந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை கழுவிய கோழி இறைச்சியுடன் சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

பின்பு ஊற வைத்த  கோழி இறைச்சியினை பாத்திரத்தில் அல்லது குக்கரிலோ இட்டு 2 விசில் வந்ததும் வேக வைத்து இறக்கவும். மற்றொரு பாத்திரத்ததை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை ஊற்றி  காய்ந்ததும் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இறக்கி வைத்திருக்கும் கோழி குழம்பை கடாயில் ஊற்றி, தேவையான  உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான வெண்ணெய் மிளகு கோழி கறி தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg