Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச தன்னார்வ தொண்டர் தினத்தை கொண்டாடிய DHL ஸ்ரீலங்கா

In வணிகம்
Updated: 07:43 GMT, Nov 29, 2015 | Published: 07:21 GMT, Nov 29, 2015 |
0 Comments
1224
This post was written by :

உலகின் முன்னணி அஞ்சல் மற்றும் சரக்கியல் குழுமமான Deutsche Post DHL குழுமத்தின் அங்கமான DHL ஸ்ரீலங்கா நிறுவனமானது அதன் ஊழியர்களின் பங்களிப்புடன் உள்நாட்டு சமூகத்தினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுடன் சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் 2015 இனை கொண்டாடியிருந்தது.

சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் எனப்படுவது உள்நாட்டு சமூகத்தினருக்கு திருப்பி செலுத்துவதற்கான உலகளாவிய இயக்கியாகவும், ஊழியர்கள் மத்தியில் தொண்டாற்றும் மனப்பான்மைய உருவாக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது.

இலங்கையில் உள்ள DHL Global Forwarding மற்றும்DHL Express நிறுவனங்களைச் சேர்ந்த 50 ஊழியர்கள் ஒன்று சேர்ந்து தேசிய மனநல சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய பிராந்திய பராமரிப்பு நிலையமான முல்லேரியா, ‘தஹலியா’, வார்ட் இல 05, (இல்லம் முதல் 45 தேவைப்பாடுகள்) புனர்வாழ்வு மையத்தினை புதுப்பித்திருந்தது.

மேலும் 40 மெத்தைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்ததுடன், நோயாளிகளுக்கு உணவு வழங்கி ஊழியர்கள் தமது நேரத்தை அவர்களுடன் செலவிட்டிருந்தனர். ‘சரக்கியல் துறையில் தலைவர் எனும் ரீதியில், நாம் வாழ்கின்ற மற்றும் பணிபுரிகின்ற சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

இந்த வருட சர்வதேச தன்னார்வ தொண்டர் தின செயற்பாடுகளில் எமது ஊழியர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து மக்களுக்கு உதவியமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என DHL Express இன் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி திமித்ரி பெரோரா மற்றும் DHL Global Forwarding இன் தலைமை அதிகாரி நஜுப்-ஹர் ரஹ்மான் ஆகிய இருவரும் தெரிவித்திருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg