Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோட்டார் ஓட்டப்பந்தய விருதுகளை வழங்கிய சியெட்

In வணிகம்
Updated: 08:55 GMT, Nov 29, 2015 | Published: 08:26 GMT, Nov 29, 2015 |
0 Comments
1225
This post was written by :

2015 சியெட்  SLADA விருது வழங்கும் விழாவில் சியெட் மோட்டார் ஓட்ட அணிக்கு கார் பிரிவில் சிறந்த அணிக்கான விருது தொடர்ந்து இரண்டாவது வருடமாகக் கிடைத்துள்ளது. அஹ்ஸன் சில்வா இந்த ஆண்டுக்கான சிறந்த சாரதியாகத் தெரிவானார். விறுவிறுப்பான மற்றொரு மோட்டார் ஓட்டபந்தய பருவகாலம் இனிதே முடிவடைந்துள்ளது.

2015இன் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனராக ஷெஹான் அதிகாரி தெரிவு செய்யப்பட்டார்.இவ்வாண்டின் மோட்டார் சைக்கிள் பிரிவு சாம்பியன் அணியாக ஹொண்டா அணி தெரிவானது. சாம்பியன்களை ஆதரித்த ஒன்பது தனிநபர்கள், நான்கு சிறந்த சாரதிகள், மற்றும் சைக்கிள் அணியின் ஓட்டுனர்கள் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சியெட் SLADA விருது வழங்கும் நிகழ்வுக்கு கடந்த ஆறு வருடங்களாக இலங்கையின் முன்னணி டயர் வர்த்தக முத்திரையான சியெட் அனுசரணை வழங்கி வருகின்றது. அதற்கான அங்கீகாரமாகவே இந்த விழாவுக்கு நாமமும் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் மோட்டார் பந்தய பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட நிலை அதிகாரிகள் மற்றும் கௌரவ விருந்தினர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

2015இன் பிரதான நிகழ்வுகளான பொக்ஸ்ஹில் சுபர்க்ரொஸ், சீகிரியரெலிக்ரொஸ், கன்னர்ஸ் சுபர்க்ரொஸ், கஜபாசுபர்க்ரொஸ் மற்றும் ரொதர்ஹாம் கட்டுகுருந்த செர்கிட் மீட் என்பனவற்றில் பங்கேற்றவர்களை அடிப்படையாகக் கொண்டே விருதுகள் வழங்கப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg