Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாஷிங்டனுக்கு விரைவில் நேரடி விமான சேவை: ஏர் இந்தியா தகவல்

In வணிகம்
Updated: 09:47 GMT, Nov 29, 2015 | Published: 09:47 GMT, Nov 29, 2015 |
0 Comments
1307
This post was written by : Shailu
Air India

அண்மையில் புதுடெல்லியிலிருந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகருக்கு முதல் முறையாக நேரடி விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவித்த ஏர் இந்தியா விரைவில் வாஷிங்டன்னுக்கும் நேரடி விமானத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை நியூயார்க், சிகாகோ மற்றும் நேவர்க் ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டுமே ஏர் இந்தியா நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது.

இந்த சூழலில், அண்மையில் அந்நிறுவனத்தின் தென்மண்டல இயக்குநர் ஹரிகர் கூறும் போது, ‘எதிர் வருகிற டிசம்பர் 2ஆம் திகதி முதல் புதுடெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏஐ-173 என்ற விமானம் வாரந்தோறும் புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

விமான சேவை உள்ள நாட்களில் புதுடெல்லி விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் இந்திய நேரப்படி அதிகாலை 2.45 மணிக்கு புறப்பட்டு கலிபோர்னியா நேரப்படி அங்கு காலை 6 மணிக்குச் சென்றடையும்.

சென்னையில் உள்ள பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக ஏஐ-043 என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுடெல்லி விமான நிலையத்தைச் சென்றடையும்.

இந்த விமானத்தில் சொகுசு வசதிகளுடன் கூடிய முதல் வகுப்பில் 8 இருக்கைகள், முக்கிய பிரமுகர்கள் வகுப்பில் 35 இருக்கைகள், சாதாரண வகுப்பில் 195 இருக்கைகள் என மொத்தம் 238 இருக்கைகள் இருக்கும்.

இது முற்றிலும் புதிய சேவை என்பதால் இந்த விமானத்தில் முதல் வகுப்பு, பிசினஸ் வகுப்பில் பயணம் செய்வோருக்கு இந்தியாவுக்குள் பயணம் செய்வதற்கான ஒரு பற்று சீட்டு இலவசமாக வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு நேற்று நடந்த நிகழ்வொன்றில் கூறும் போது, ‘ஏர் இந்தியா வாஷிங்டனுக்கு நேரடி விமான சேவை தொடங்குவது குறுத்து பரிசீலனை செய்வதாக ஏர் இந்தியா தரப்பிலிருந்து தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த அறிவிப்புகள் இந்திய விமான பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg