Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குளிர் காலங்களில் சருமத்தை வீட்டிலிருந்தே பேணலாம்!

In
Updated: 07:20 GMT, Nov 30, 2015 | Published: 07:20 GMT, Nov 30, 2015 |
0 Comments
1411
This post was written by :

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும். பின் அந்த கல வையை, வெயில் அதிகமாகபடும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

அழகு நிலையங்களுக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் இரசாயனங்களால், நாள் செல்ல முக அழகு கெட்டு விடும். உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும்.

எண்ணெய் சருமத்திற்கான மாஸ்க் மூன்று கரண்டி முல்தானிமெட்டி, ஒரு தே.கரண்டி தயிர், அரை துண்டு தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எண்ணை ஆகிய வற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும். இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும்.

இந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது. வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க் முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு தே.கரண்டி தேன், ஒரு தே.கரண்டி சோளமா, இரண்டு தே.கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் எண்ணை ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான (Sensitive) சருமத்திற்கான பேஸ் மாஸ்க் நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு தே.கரண்டி தேங்காய் எண்ணை, ஐந்துதுளி ரோஸ் வோட்டர் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவேண்டும். இந்தவகை பேஸ்மாஸ்க் வறண்ட சருமத்திற்கும் ஏற்றது.

குளிர்காலத்தில் நல்ல தெளிவான ஒளிரும் சருமமத்தினை கொண்டிருப்பது மிகவும் கடினம். எனவே கீழ் காணும் முறையினை முயற்சித்து பாருங்கள் பலன் நிச்சயமாக தெரியும்.

50 கிராம் திராட்சை, ஸ்ட்ரோபெரி, அப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு தே.கரண்டி தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை சாறு சேர்த்து, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென ஒளிரும். ஒளிரும் சருமத்திற்கான இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் தோல் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும். இவ்வகை மாஸ்க் அடிக்கடி முகத்தில் பூசினால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg