Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Prestige உற்பத்திகளை இலங்கையில் அறிமுகப்படுத்திய சிங்கர் பீஎல்சி

In வணிகம்
Updated: 08:38 GMT, Nov 30, 2015 | Published: 08:34 GMT, Nov 30, 2015 |
0 Comments
1257
This post was written by :

வர்த்தகநாமத்தினை விரிவுபடுத்தியுள்ளதன் மூலமாக இந்தியாவின் மிகப் பாரிய சமையலறை சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்துடன் கொண்டுள்ள இரு தசாப்தங்களுக்கும் மேலான பிரத்தியேகமான பங்குடமையைக் கொண்டாடுகின்றது.

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் நாட்டில் முதலிடத்தில் திகழும் நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி, நவீன காலத்து குடும்பங்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற தேவைகளை ஈடுசெய்யும் வகையில் தனது உற்பத்தி வரிசையினை மேலும் நீட்டித்து புதிய உயர் தரத்திலான prestige உற்பத்திகள் பலவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்ணாடியிலான மேற்புறத்தைக் கொண்டுள்ள Prestige குக்கர், Prestige Mixer  கிரைன்டர், Prestige Wet கிரைன்டர் மற்றும் Prestige Stainless Steel பிரஷர் குக்கர்கள் மற்றும் Prestige non-stick சமையல் பாத்திர உற்பத்தி வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு BMICH மண்டபத்தில் இடம்பெற்ற 5 ஆவது சிங்கர் Lifestyle  கண்காட்சியில் சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் இந்தியாவின் TTK Prestige  நிறுவனத்தின் ஏற்றுமதித்துறையின் பொது முகாமையாளரான நரசிங் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அறிமுக நிகழ்வில் ‘ Prestige – இல்லத்தரசிகள்’ பெருமை என்ற வர்த்தகநாமத்தின் ஊக்குவிப்பு வாக்கியமும் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், சமையல் கலை நிபுணரான டொன் ஷேர்மன் அவர்கள் புதிய உற்பத்தி வரிசை தொடர்பாக நிகழ்த்திய செயல் விளக்கத்தை கண்காட்சியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் நேரடியாக கண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டனர்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg