Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கவிமாறன் சிவாவின் ‘ஜப்னா’ குறும்படம்

In
Updated: 15:30 GMT, Jan 20, 2016 | Published: 15:30 GMT, Jan 20, 2016 |
0 Comments
1698
This post was written by : Varothayan

கடந்த 10 ஆம் திகதி யாழ் செல்லா திரையரங்கில் வெளியிடப்பட்ட கவிமாறன் சிவாவின் ‘ஜப்னா’ குறும்படம் தற்சமயம் யூ-ரியுப் இலும் தரவேற்றப்பட்டிருக்கின்றது.

போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குழுக்களுக்கிடையே இடம்பெறும் சண்டைகளை களமாகக் கொண்டு இக்குறும்படம் படைக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையும், கடத்தலும் இடம்பெற்றுக் கொண்டிருந்தாலும், ‘ஜப்னா’ குறும்படத்தில் காட்டப்படுவதைப் போல் யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் வர்த்தகம் சர்வசாதரணமாக நடைபெறுவதில்லை.

எனவே, இதனை ஏறக்குறைய ஒரு கற்பனைக் கதையாகவோ அல்லது தென்னிந்திய திரைப்படங்களின் தழுவலாகவோ தான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.

கதை என்ற விடயத்தை ஒரு புறத்தில் வைத்துவிட்டு ஏனைய விடயங்களைப் பார்ப்போமானால், படத்திற்கு பலம் ஒளிப்பதிவு. ஆனால், சரியான இடங்களில் கத்தரிக்காத படியால் படம் மிகவும் மெதுவாக நகர்கின்றது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை ஜெயேந்திரா மேற்கொண்டிருக்கின்றார்.

இசை பத்மயன், குறும்படத்தில் உள்ள ஒரு பாடல் உட்பட பின்னணி இசையும் ரசிக்கும் படியே இருந்தது. கவிமாறன் சிவா, பிரணவன், நிரோஷா உட்பட பலர் இக்குறும்படத்தில் நடத்திருந்தார்கள். அனைவரும், தங்கள் பங்கைச் சிறப்பாக செய்தாலும், புதுமையில்லாத மெதுவான திரைக்கதை பார்வையாளர்களை அவ்வளவு ஈர்க்கவில்லை என்பதே உண்மை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg