Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையத்தில் கலக்கும் ‘வெட்டு கொத்து’ குறும்பட ரீஸர்

In
Updated: 17:17 GMT, Feb 24, 2016 | Published: 17:17 GMT, Feb 24, 2016 |
0 Comments
1456
This post was written by : Varothayan

‘வெட்டு கொத்து’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து உருவாகி வரும் குறும்படத்தின் ரீஸரை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறும்படத்தின் தலைப்புக்கு ஏற்றது போல, ரீஸரும் மிரட்டலாக இருக்கின்றது.

கிருத்திகன் குகேந்திரன், கதை – திரைக்கதை – வசனம் எழுத, கானா வரோ இந்தக் குறும்படத்தை இயக்கியிருக்கின்றார். படத்தின் ஒளிப்பதிவை நிசாந்தன் ராஜகுலசிங்கமும், எடிட்டிங்கை ரொசான் நிரோஷூம் கவனிக்க, தர்சனன் அருட்செல்வன் இசையமைக்கின்றார்.

கிருத்திகன், வரோதயன், கோபி ரஞ்சன், மயூரப்பிரியன் ஆகிய நால்வர் நடித்திருக்கும் இந்தக் குறும்படம் ஒரேயொரு படப்பிடிப்புத் தளத்தில் வெறும் இரண்டு மணித்தியாலங்களில் படம் பிடித்து முடிக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg