Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்காய் புளியோதரை

In
Updated: 04:18 GMT, Mar 1, 2016 | Published: 04:17 GMT, Mar 1, 2016 |
0 Comments
1289
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

மாங்காய் – ஒன்று
பச்சரிசி சாதம் – 3 கப்
காய்ந்த மிளகாய் – 4
பச்சை மிளகாய் – 2
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டீஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலையை வறுத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சை மிளகாயை நீளவாட்டில் நறுக்கிப் போட்டு பிரட்டிக் கொள்ளவும்.

பின்னர் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, வறுத்து வைத்திருக்கும் பொருட்களை கலக்கவும். இதை அப்படியே சாதத்தில் சேர்த்து, மாங்காய் துருவல் போட்டு லேசாக கலக்கவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் மூடி வைத்து, பின்பு பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg