Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிந்தை மகிழும் சிவதரிசனம்!

In ஆன்மீகம்
Updated: 16:02 GMT, Mar 1, 2016 | Published: 16:02 GMT, Mar 1, 2016 |
0 Comments
1381
This post was written by :

சிவனுக்கு காலனை வென்றதால் ‘மிருத்யுஞ்ஜயன்’ என்ற திருநாமம் உண்டு. ‘மரணத்தை வென்றவர்’ என்பது இதன் பொருள். ‘மிருத்யு’ என்றால் மரணம். மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்தபோது, சிவபெருமான் காலனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றியதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. காலதேவனின் கடமையைச் செய்ய சிவனே தடையாக இருந்ததாக நமக்குத் தோன்றும்.

ஆனால், இந்த விளையாடலில் சிவன் யமனுக்கும் அருள்புரியவே செய்தார். பார்வதியோடு அர்த்தநாரீஸ்வரராக இருந்த சிவன், இடக்காலால்தான் யமனை உதைத்தார். இடபாகம் அருளே வடிவான அம்பாளின் பாகம் என்பதால், யமனின் உள்ளத்தில் தர்ம சிந்தனையே தழைத்தது. இதையடுத்து அவன் தர்மப்படி நடந்துகொண்டான்.

சிந்தை மகிழும் சிவதரிசனம்!

மன்னார்குடி அருகில் உள்ள ‘திருராமேஸ்வரம்’ என்ற தலத்தில் ராமபிரான் பூஜித்த ராமலிங்கத்தையும், சீதை பூஜித்த சீதேஸ்வரரையும் தரிசனம் செய்யலாம். திருவானைக்காவலில் ஸ்ரீராமர் தீர்த்தம் அமைத்து நிறுவிய சிவலிங்கம் விஷ்ணுவேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சயனக் கோலத்தில் இருக்கும் கோவிந்தராஜரை அருகில் சந்நிதி கொண்டிருக்கும் சிவலிங்க மூர்த்தியைப் பூஜை செய்யும் நிலையில் தரிசனம் செய்யலாம்.

காஞ்சிபுரம் அருகேயுள்ள ‘தாமல்’ எனும் கிராமத்தில் வராகமூர்த்தி பூஜித்த சிவன் வராகேஸ்வரர் எனும் பெயரிலும், நரசிம்மர் வழிபட்ட ஈசன் நரசிம்மேஸ்வரர் எனும் பெயரிலும் அருள்புரிகின்றனர். சூரியனார் கோயிலில் சிவராத்திரியன்று சூரிய பகவானுக்கு நான்கு காலமும் அபிஷேகமும், பூஜைகளும் நடைபெறுகின்றன.

காஞ்சிபுரத்தில் திருமால் மீனாக மாறி சிவபெருமானை பூஜை செய்ததால், ஈசனுக்கு ‘மச்சேஸ்வரர்’ என்று பெயர். காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சிவனை திருமால் ஆமை வடிவில் வழிபட்டதால், அப்பெயர் வந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg