Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கையும், காலும் கருப்பா இருக்கா? : அப்போ இத பண்ணுங்க!

In
Updated: 09:39 GMT, Mar 2, 2016 | Published: 09:36 GMT, Mar 2, 2016 |
0 Comments
1336
This post was written by : Anojkiyan

வெள்ளரிக்காய் மற்றும் தேன் : வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும்.

ஒலிவ் ஒயில் : தினமும் ஒலிவ் ஒயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர, கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஒலிவ் ஒயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.

இளநீர் : இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் கருமை நீங்கும்.

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் : எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து, கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ, அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.

தயிர் : தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் ஜிங்க் தான் காரணம். மேலும் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து வர, சரும வறட்சியும் நீங்கும்.

தக்காளி : தக்காளியை அரைத்து அதனை கை, கால்களில் தடவி ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதன் மூலம், சரும நிறத்தை மேம்படுத்தலாம்.

முட்டை வெள்ளைக்கரு : உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்துங்கள். அதுவும் வாரத்திற்கு 2 முறை முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, கை, கால்களில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதன் மூலம் சருமத்தில் உள்ள கருமை விரைவில் அகலும்.

ஓட்ஸ் மற்றும் தயிர் : ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தயிர் மற்றும் தக்காளி சாறு சேர்த்து கலந்து, கை, கால்களுக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ, கை, கால்களில் உள்ள கருமை நீங்கும் மற்றும் சருமத்தில் உள்ள இறந்த செல்களும் போய்விடும்.

பால் மற்றும் பப்பாளி : கை, கால்கள் வெள்ளையாக வேண்டுமானால், பால் பவுடருடன் தேன் மற்றும் மசித்த பப்பாளி சேர்த்து கலந்து, தடவி நன்கு ஊற வைத்து கழுவ, சருமத்தின் நிறம் மேம்பட்டிருப்பதைக் காணலாம்.

பால் : காய்ச்சாத பாலை கை, கால்களில் தடவி உலர வைத்து, நீரில் நனைத்த பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் வெளியே வெயிலில் சென்று வந்ததும் செய்தால், சருமத்தில் உள்ள கருமை சீக்கிரம் போய்விடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg