Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் அறிமுகமாகியுள்ள Huawei Mate 8 மற்றும் GR5 நவீன ஸ்மார்ட்போன்கள்

In வணிகம்
Updated: 12:43 GMT, Mar 4, 2016 | Published: 12:42 GMT, Mar 4, 2016 |
0 Comments
1122
This post was written by : Anojkiyan

Huawei மற்றும் அதன் தேசிய விநியோகஸ்த்தரான சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வெகு விமரிசையான நிகழ்வொன்றில் Huawei Mate 8 மற்றும் Huawei GR5 ஆகிய இரு பிரதான நவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்துள்ளன.

புதிய இரட்டை ஸ்மார்ட்போன்கள் வழங்கும் ‘மின்வலு மற்றும் திறன் புத்தாக்கத்தின்’ மகிமையை 400 இற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

பொன் மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கப்பெறுகின்ற Mate 8ஆனது ‘சர்வதேச தளமேடையில் வியாபாரத்தின் புதிய பாணி’ என்ற தனித்துவத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனம் புத்தாக்கமான வன்பொருள் அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், Kirin 950 chipset  இல் தொழிற்படும் முதலாவது ஸ்மார்ட்போனாகவும் திகழ்கின்றது.

100 சதவீதம் வரையான CPU மேம்படுத்தல் மின்வலு, 125 சதவீதம் வரையான GPU தொழிற்பாட்டுத்திறன் மற்றும் Kirin 925 உடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் மேம்பட்ட மின்வலுத் திறன் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

‘பாரிய கனவுகளைக் கொண்டுள்ள இளம் சிந்தனைகளுக்கு’ முன்மாதிரியாக அமைந்துள்ள GR5 ஆனது பொன்னிறத்தில் கிடைப்பதுடன், CMOS சென்சார் குவிக்கப்பட்ட 13 MP F2.0 பின்னோக்கிய கமெரா, 7 செமீ microshot மற்றும் 5MP முன்னோக்கிய கமெரா ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg