Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிக்ஸ் ப்ருட் ஜேம்

In
Updated: 10:48 GMT, Mar 6, 2016 | Published: 10:46 GMT, Mar 6, 2016 |
0 Comments
1250
This post was written by :

தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 1 கப்
பப்பாளிபழம் – 1 கப்
அன்னாசிப்பழம் – 1 கப்
ஆப்பிள் – 1 கப்
சர்க்கரை – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்யும் முறை
முதலில் எல்லா வகைப்பழங்களையும் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் எல்லா பழங்களையும் சேர்த்து ¼ கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்ததும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததை சூப் வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாற்றை எடுத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் மிதமான தீயில் சாற்றை ஊற்றி சர்க்கரை சேர்த்து கிளறவும். பின்னர் அதில் எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றவும். ஜேம் பதத்தில் வந்ததும் இறக்கவும். தேவையான அளவு மிக்சட் ப்ரூட் எசன்ஸ் ஊற்றவும். அந்தந்த காலங்களில் கிடைக்கும் பழங்களை ஜேம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg