Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காரியாலயத்தில் பகலில் தூக்கம் வருகின்றதா?

In
Updated: 11:10 GMT, Mar 6, 2016 | Published: 11:09 GMT, Mar 6, 2016 |
0 Comments
1228
This post was written by :

பகல் உணவு உட்கொண்டதன் பின்பு அலுவலகத்தில் சிலரின் வேலையே தூங்குவதாகத் தான் இருக்கும். இன்னும் சிலர் சாப்பாடு முடித்து சில நேரங்கள் தூங்கிளால் தான் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

ஒருவர் சிறிது நேரம் தூங்குவது பிரச்சனை இல்லை. எனினும் சிலர் தமது சக்தியையே இழந்து சோர்வடைந்து போய்விடுவார்கள். இவ்வாறான நிலைமைகள் சில நேரங்களில் அவர்களின் தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தும். அது மாத்திரமின்றி உடல் ஆரோக்கியத்திலும் இது சில பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடற்பயிற்சியும், விளையாட்டும் மிக முக்கியமாக உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் குறிப்பிடும்பொழுது, ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சி அல்லது விளையாட்டு எதுவும் இல்லாமல் இருந்தால் அவரது உடலில் சக்தி அவ்வளவு வேகமாக எரியூட்டப்படாது. அது உடல் சோர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

எனவே, காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது சிலரது கருத்து. எனினும் எப்படியாவது அதற்கென்று நேரம் ஒதுக்குவது சிறந்தது. அவ்வாறு முடியாது என்றால், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது ஜோக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg