Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெயிளில் இருந்து பாதுகாப்புப் பெற சில வழிகள்

In
Updated: 11:38 GMT, Mar 6, 2016 | Published: 11:38 GMT, Mar 6, 2016 |
0 Comments
1251
This post was written by :

சிலருக்கு வெயிலின் பாதிப்பு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிகமாக வெயிலில் இருக்கும் சிலருக்கு நோய்களும் ஏற்படுவதுண்டு. எனினும் இந்த பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு மிகவும் இலகுவான சில வழிமுறைகள் உள்ளன.

வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் போத்தல் வைத்திருப்பது சிறந்தது. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். அதேபோன்று வெயில் காலங்களில் மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

வெயில் நேரங்களில் மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க குடையைப் பயன்படுத்தலாம்.

வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி ஏதாவது ஒரு க்ரீம் அல்லது சவர்க்காரத்தைப் பயன்படுத்தலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg