Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முந்திரி வடை

In
Updated: 08:22 GMT, Mar 7, 2016 | Published: 08:22 GMT, Mar 7, 2016 |
0 Comments
1230
This post was written by :

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
சிவப்பு மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
சோம்பு – 1 தேக்கரண்டி
ரவை – ½ தேக்கரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
முந்திரி – 6
உப்பு – தேவைக்கு ஏற்ப
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்யும் முறை
கடலைப் பருப்பு மற்றும் பச்சரிசி சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்கு வடிகட்டி பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், முந்திரி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நன்கு சூடானவுடன் வடை போல் தட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg