Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் கடலுணவு ஏற்றுமதியில் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 08:43 GMT, Mar 7, 2016 | Published: 08:43 GMT, Mar 7, 2016 |
0 Comments
1247
This post was written by :

2015ஆம் அண்டில் இலங்கையின் கடலுணவு ஏற்றுமதியின் அளவு 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய வங்கியின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டியே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 15 மில்லியன் டொலர் பெறுமதியான கடலுணவுப் பொருட்கள் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனினும் 2014ஆம் ஆண்டு குறித்த காலப்பகுதியில் 21.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கடலுணவுப் பொருட்கள் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கையின் கடலுணவுப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையே நாட்டின் கடலுணவு ஏற்றுமதி வீழ்ச்சிக்கு பிரதாக காரணமாக இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg