Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சாதனை

In வணிகம்
Updated: 08:56 GMT, Mar 7, 2016 | Published: 08:56 GMT, Mar 7, 2016 |
0 Comments
1259
This post was written by :

கடந்த மாதம் (பெப்ரவரி) இலங்கைக்கு வருகை சந்த சீன சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. இதனால் முதல் தடவையாக இந்திய சுற்றுலாப் பயணிகளை விட சீன சுற்றுலாப் பயணிகளின் அதிகமாக வருகை தந்தமை சாதனையாக உள்ளது.

கடந்த மாதம் சீன சுற்றுலாப் பயணிகள் 32,186 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இத்தொகை 17.5 சதவீத அதிகரிப்பை காட்டியுள்ளது. அதேபோன்று குறித்த காலப்பகுதியில்

இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்றுக்கு 33 சதவீமாக அதிகரித்ததுடன், இவ்வாறு வருகை தந்தவர்கள், 26,559 இந்திய சுற்றுலாப் பயணிகளின் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இது 17.5 சதவீத அதிகரிப்பாக உள்ளது.

2016ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் மொத்தமாக 57,269 சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இது 49 சதவீத அதிகரிப்பாக உள்ளது.

2016ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் இலங்கைக்கு வந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 21 ஆயிரத்து 787 பேராக உள்ளது. இது 22 சதவீத அதிகரிப்பு என சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg