Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இம்மாதத்தில் உள்ள முக்கிய விரதங்கள்

In ஆன்மீகம்
Updated: 10:31 GMT, Mar 7, 2016 | Published: 10:31 GMT, Mar 7, 2016 |
0 Comments
1294
This post was written by :

முக்கிய விரதங்கள் ஒவ்வொன்றும் நமக்கு பல பயன்களையும், நன்மைகளையுமு; பெற்றுத் தருகின்றன. இதில் அடுத்தடுத்து வரும் விரதங்களை அறிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் இம்மாதமான மார்ச் மாதத்தில் வரும் முக்கிய விரதங்களைப் பார்ப்போம்.

மார்ச் – 7 (திங்கள்) – சிவராத்திரி
மாசி மாதத்தில் அமாவாசைக்கு முதல் நாள் மகா சிவராத்திரி தினம் வருகிறது. இந்நாளில் உபவாசமிருந்து அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவபுராணம் பாராயணம் செய்தால் பாவங்களும், நோய்களும் நீங்கும். இது இன்றைய தினமாகும்.

மார்ச் -14 (திங்கள்) காரடையான் நோன்பு
இது பங்குனி மாதம் சுக்லபட்சம் அஷ்டமி திதியில் வரும் நோன்பு. காரஅடை செய்து அம்மனுக்கு படைத்து விரதம் இருந்து வழிபட வேண்டும். இந்த விரதத்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். அதோடு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

மார்ச் – 23 (புதன்) பங்குனி உத்திரம்
பங்குனி, மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் கூடிய இந்நாள் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்தது. 48 ஆண்டுகள் இந்த விரதம் இருந்தால் அடுத்த பிறவியில் தெய்வீக தன்மையும், பிறவி பலனும் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg