Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்வழி காட்டும் குர்ஆன்

In ஆன்மீகம்
Updated: 10:53 GMT, Mar 7, 2016 | Published: 10:52 GMT, Mar 7, 2016 |
0 Comments
1251
This post was written by :

அல்லாஹ் இவ்வுலகிற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக்குர்ஆன் உலக மனிதர்களில் பல மாற்றங்களையும் அறிவியல் ரீதியில் தெளிவையும் வழங்குகின்றது. இது மட்டுமன்றி மனித வாழ்க்கை சிறப்படையவும், மனித உள்ளங்கள் அமைதியடையவும் இது சிறந்த ஒரு வழிகாட்டியாக உள்ளது.

குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்தால், அது மறுமையில் உங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும். அதேபோன்று, குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும். குர்ஆனை ஓதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் கண்ணியமான உயர்ந்த மலக்குகளுடன் மறுமையில் இருப்பார்கள்.

குர்ஆன் இறக்கியருளப்பட்டதின் நோக்கம் இது மட்டுமல்ல, குர்ஆனை அரபு மொழியில் ஓதுவதோடு அதன் கருத்துக்களையும் உணர்ந்து, படித்து, தன் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியாக்கம் செய்யப்பட்ட குர்ஆனை, மனம் அமைதிபெறும் நேரத்தில் எடுத்து, அதிலுள்ள சில வசனங்களையாவது கருத்துணர்ந்து தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து படிக்க வேண்டும்.

சிந்திக்கச் சொல்லும் வசனத்தைக் கண்டால் சிந்திக்க வேண்டும், அல்லாஹ்வின் தண்டனை பற்றிய வசனத்தைக் கண்டால் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்க வேண்டும். அல்லாஹ்வின் கண்ணியம் பற்றிய வசனம் வந்தால் அல்லாஹ்வை துதிக்க வேண்டும். அல்லாஹ்வின் அருள் மற்றும் சுவர்க்கம் பற்றி கூறப்பட்டால் அல்லாஹ்விடம் அதைக் கேட்க வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg