Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

In ஆன்மீகம்
Updated: 11:13 GMT, Mar 7, 2016 | Published: 11:13 GMT, Mar 7, 2016 |
0 Comments
1263
This post was written by :

‘யாழ்ப்பாணம் குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக இடம்பெற்றது.

நாவாந்துறை மரியன்னை ஆலய பங்கு மக்களின் கடின உழைப்பினாலும் முன்னை நாள் பங்குத்தந்தை அருட்பணி இராஜசிங்கம் அடிகளாரின் உழைப்பினாலும் குருசடி தீவில் கடல்மாரக்கமாக அனைத்து பொருட்களும் எடுத்து சென்று கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு, கடல்மார்கமாக யாத்திரிகள் பயனம் செய்தனர். அற்கான சகல ஏற்பாடுகளையும் புதிய பங்குத்தந்தை அருட்பணி அன்ரனிபாலா தலைமையில் பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இம்மாதம் 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. அதன் பின்னர் நவநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நற்கருணைத் திருவிழாவும் நேற்றயதினம் திருநாள் தீருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்பட்டது

இத்திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில், அருட்பணி ஜெபரெட்ணம் அடிகளார் மற்றும் அருட்பணி ஸ்ரோபன் அடிகளார் பங்குத் தந்தை அருட்பணி அன்ரனிபாலா அடிகளார் ஆகியோர் ஒன்றிணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.

இதன்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் புனித அந்தோனியாரின் புனித சொரூபம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு. அதன் பின்னர் இறுதி ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg