Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மல்டி பொடி இட்லி

In
Updated: 11:57 GMT, Mar 8, 2016 | Published: 11:53 GMT, Mar 8, 2016 |
0 Comments
1191
This post was written by : Anojkiyan

நீங்கள் இட்லியை பல்வேறு விதமாக, சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் மல்டி பொடி இட்லியை செய்து சுவைத்ததுண்டா?

இல்லையெனில் இங்கு மல்டி பொடி இட்லி செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

மினி இட்லி – தேவையான அளவு
மிளகுத்தூள், எள் பொடி தலா – 1 டீஸ்பூன்
இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிது
உப்பு – ருசிக்கு
கறிவேப்பிலை பொடி – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க…

கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) – சிறிது
நெய் – 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

இட்லி மிளகாய் பொடியில் நல்லெண்ணெய் கலந்து 5 இட்லிகளில் மேல், கீழ் பகுதிகளில் தடவவும். வறுத்த எள் பொடி, மிளகுத் தூள், நல்லெண்ணெய் விட்டு மீதி 5 இட்லியை புரட்டவும். கறிவேப்பிலை பொடியில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள இட்லியை புரட்டி வைக்கவும்.

ஒவ்வொரு வகை இட்லியையும் (மொத்தம் 3 வரும்) மூன்று மூன்றாக அடுக்கி டூத்பிக் அல்லது ஐஸ் குச்சியில் குத்தவும். கடாயில் நெய் விட்டு தாளிக்கும் பொருளை தாளித்து அடுக்கி வைத்துள்ள மல்டி கலர் இட்லி மீது கொட்டி பரிமாறவும். மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg