Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காராமணி பேஸின் பிட்லா

In
Updated: 12:06 GMT, Mar 9, 2016 | Published: 12:06 GMT, Mar 9, 2016 |
0 Comments
1209
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

சிவப்பு காராமணி அல்லது பச்சைப் பட்டாணி – 1 கப் (ஊற வைத்துக்கொள்ளவும்)
கடலை மாவு – 100 கிராம்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கு
பெருங்காயத் தூள் – சிறிது

தாளிக்க…

கடுகு, உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

விருப்பமான தானியம் அல்லது காய்கறிகளை அரிந்து உபயோகப்படுத்தலாம். உப்பு போட்டு வேக விட்டு எடுத்துக்கொள்ளவும். பஜ்ஜி மாவு கரைப்பதுபோல கடலை மாவில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் போட்டு நீர் விட்டு கரைக்கவும். கடாயில் பாதி குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூள் சேர்த்து கடலை மாவு கரைசலை அதில் விட்டு கை விடாமல் கிளறவும்.

சீக்கிரம் வெந்துவிடும். வெந்த தானியத்தை சேர்த்து மீதி எண்ணெயும் சேர்த்து அடுப்பை குறைந்த தணலில் வைத்து கைவிடாமல் கிளறவும். பந்து போல் சுருண்டு வரும் நேரம் இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg