Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் – ஓமான் இடையே முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து

In வணிகம்
Updated: 13:51 GMT, Mar 9, 2016 | Published: 13:24 GMT, Mar 9, 2016 |
0 Comments
1197
This post was written by : Anojkiyan

ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிடையே முக்கிய துறைமுக ரீதியிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரசீக வளைகுடாவில் ஈரானின் மிகப் பெரும் வர்த்தகப் பங்காளியாக விளங்கிய ஐக்கிய அரபு எமிரேட்சின் இடத்திற்கு பதிலீடாக ஓமானை இணைத்துக் கொள்ளும் வகையில் இந்த ஒப்பதந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தமானது, ஈரானின் ஷஹித் ராஜீ துறைமுகம், மிகப் பெரிய சரக்குத் துறைமுகமான பண்டர் அப்பாஸ் துறைமுகம் மற்றும் ஓமான் வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள சபாஹர் துறைமுகத்தையும் மையப்படுத்தியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரானின் இவ்விரு துறைமுகங்களினதும் உட்கட்டமைப்பு விருத்தி, நவீனமயமாக்கல் மற்றும் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான பயிற்சிகளை முன்னெடுத்தல் என்பவற்றிற்கு ஓமானின் சபாஹர் துறைமுகம் ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளதாத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதனை அடுத்து, எண்ணெய் ஏற்றுமதியில் சர்வதேச சந்தையில் இழந்த இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்போடு தொடர்ந்தும் செயற்பட்டு வரும் ஈரான், தமது துறைமுகங்களையும் விருத்தி செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg