Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடர்த்தியான புருவத்தை பெற சில டிப்ஸ்!

In
Updated: 07:16 GMT, Mar 11, 2016 | Published: 07:15 GMT, Mar 11, 2016 |
0 Comments
1289
This post was written by : Anojkiyan

பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஏராளமாக உள்ளது. இது முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன் பாதாம் எண்ணெயை புருங்களில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

கற்றாழை : கற்றாழையில் உள்ள அலோனின் என்னும் பொருள் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். ஆகவே கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் புருவங்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வருவதால், புருவங்கள் அடர்த்தியாக வளர்வதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எணணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் வளர்ச்சியைத் தூண்டக்கூடியவை. மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, மயிர்கால்களில் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே இந்த எண்ணெயை தினமும் புருவங்களின் மீது தடவி வர, புருவங்கள் நன்கு வளரும்.

விளக்கெண்ணெய் : விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி வர, புருவங்களில் உள்ள முடி நன்கு அடர்த்தியாக வளரும். இச்செயலை தொடர்ந்து 1 மாதம் பின்பற்றி வந்தாலே, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முட்டையின் மஞ்சள் கரு : முட்டையில் உள்ள பயோட்டின் என்னும் பொருள், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 2 வாரத்திற்கு தினமும் செய்து வந்தால், உங்கள் புருவங்கள் நன்கு வளர்ந்திருப்பதைப் பார்க்க முடியும்.

வெந்தயம் : வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்து, புருவங்களின் மீது தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, புருவங்கள் நன்கு அடர்த்தியாக இருப்பதைக் காணலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg