Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Triumph International Lankaவின் ஆண்டின் சிறந்த விற்பனை பங்காளராக Fashion Bug தேர்வு

In வணிகம்
Updated: 10:21 GMT, Mar 11, 2016 | Published: 10:21 GMT, Mar 11, 2016 |
0 Comments
1214
This post was written by : Anojkiyan

நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்ட, இலங்கையின் முன்னணி ஆடை விற்பனைத்தொடரான Fashion Bug, அண்மையில் நடைபெற்ற Triumph International Lankaவின் வருடாந்த விற்பனை மாநாட்டில் ‘ஆண்டின் சிறந்த விற்பனை பங்காளர்’ எனும் தங்க விருதை சுவிகரித்திருந்தது.

பெண்களுக்கான உள்ளாடைகள் உற்பத்தியில் ஈடுபடும் சர்வதேச ரீதியில் முன்னணியில் காணப்படும் நிறுவனமாக Triumph இன்டர்நஷனல் திகழ்கிறது.

கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், Triumph International Lanka நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகஸ்த்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட விருதுகளில், ‘ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தர் நிலையம்’, ‘ஆண்டின் சிறந்த விற்பனையாளர்’, ‘ஆண்டின் சிறந்த விற்பனை பங்காளர்’, ‘சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த விநியோகஸ்த்தர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தர்’ ஆகியன அடங்கியிருந்தன.

Triumph மீது Fashion Bug  காண்பித்து வரும் அதீத ஈடுபாடு இந்த விருதை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சுவீகரித்துள்ளமையின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காட்சியறைக்கு ‘சிறந்த விற்பனை நிலையம்’ தங்க விருது வழங்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டில் இந்த விருதை வத்தளையில் அமைந்துள்ள காட்சியறை வெற்றியீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg