Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டை மசாலா பிரட் டோஸ்ட்

In
Updated: 09:30 GMT, Mar 12, 2016 | Published: 09:30 GMT, Mar 12, 2016 |
0 Comments
1301
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

கோதுமை பிரட் துண்டுகள் – 8
வெங்காயம் – 1
தக்காளி – 1/2
பச்சை மிளகாய் – 1
முட்டை – 3
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிய அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.

பின்பு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி, அடுப்பை அணைத்து விட வேண்டும். பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், பிரட்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்ய வேண்டும். பின் செய்து வைத்துள்ள மசாலாவை டோஸ்ட் செய்த ஒரு பிட்டின் மேல் வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து பரிமாற வேண்டும்.சுவையான மசாலா பிரட் டோஸ்ட் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg