Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவரைக்காய் துவட்டல்

In
Updated: 07:05 GMT, Mar 14, 2016 | Published: 07:04 GMT, Mar 14, 2016 |
0 Comments
1239
This post was written by :

தேவையான பொருட்கள்
அவரைக்காய் – 10 முதல் 15 வரை
தேங்காய்த்துருவல் – 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 1 அல்லது 2
பச்சை அரிசி – 2 தேக்கரண்டி
எண்ணை – 1 தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – ½ தேக்கரண்டி

செய்யும் முறை
அவரைக்காயை நன்றாகக் கழுவி, காம்பு மற்றும் அதன் மேலுள்ள நாரை நீக்கி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில், அரிசி, மிளகாய் இரண்டையும் போட்டு சிவக்க வறுத்து, ஆறிய பின் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி ஒரு தேக்கரண்டி எண்ணை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன் அவரைக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி மூடி வைத்து வேக விடவும். காய் நன்றாக வெந்து, தண்ணீரில்லாமல் சுண்டியவுடன், பொடித்து வைத்துள்ள மிளகாய் பொடியைத் தூவிக் கிளறி விடவும். இறக்கி வைக்குமுன் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg