Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக சதையைக் குறைக்க இலகுவான பயிற்சி

In
Updated: 07:21 GMT, Mar 14, 2016 | Published: 07:21 GMT, Mar 14, 2016 |
0 Comments
1299
This post was written by :

இன்று உடல் உழைப்பு குறைவாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பதாலும் இளம் வயதிலேயே உடல் பருமனாகி, இடுப்பு, தொடைப் பகுதியிலும் கொழுப்பு சேர்ந்துவிடுகிறது. இதனால் நடப்பதற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கட்டுக்கோப்பான உடலைப் பெற சிலர் ஜிம்முக்கு தொடர்ந்து செல்கின்றனர். எனினும் அவ்வாறு செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை. வீட்டிலேயே முறையான உடற்பயிற்சிகள் மூலம் உடலில் தேவையற்ற சதையைக் குறைக்கலாம்.

இதற்காக முக்கியமாக ட்விஸ்டர் க்ரஞ்சஸ் (Twister crunches) எனப்படும் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இது உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்க உதவும். மேலும் உடல் பருமனையும் குறைக்கும். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து அழகான தோற்றம் பெறலாம்.

ட்விஸ்டர் க்ரஞ்சஸ் (Twister crunches)

இரண்டு கால்களையும் அகட்டிய நிலையில் தரையில் இருக்க வேண்டும். கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும். தொடர்ந்து 15 முறை செய்ய வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg