Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் கொரியாவில் அதிகரிக்கப்படவுள்ள இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்பு

In வணிகம்
Updated: 08:37 GMT, Mar 14, 2016 | Published: 08:35 GMT, Mar 14, 2016 |
0 Comments
1331
This post was written by :

இலங்கையர்களின் வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்குடன், நாட்டில் இருந்து மேலும் பலரை தென் கொரியாவுக்கு தொழில் வாய்ப்புகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில், தென் கொரிய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது.

இலங்கை மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்பை மேலும் அதிகரிக்கும் முகமாகவே இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg