Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மஹா கும்பாபிஷேக பெருவிழா

In ஆன்மீகம்
Updated: 10:39 GMT, Mar 14, 2016 | Published: 10:39 GMT, Mar 14, 2016 |
0 Comments
1294
This post was written by : Varothayan

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் பங்குனித்திங்கள் 10 ஆம் நாள் (23.03.2016) இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் பங்குனித்திங்கள் 4ம் நாள் (17.03.2016) வியாழக்கிழமை அதிகாலைப் பொழுது 5.50 மணிமுதல் 6.16 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும்.

23ஆம் திகதி புதன்;கிழமை அமிர்த சித்த யோகமும் பௌர்ணமி திதியும், உத்தர நட்சத்திரமும் கூடிய காலை 9.17 மணி முதல் 10.45 மணிவரையுள்ள இடப லக்ன சுப முகூர்த்தத்தில் குடமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு இறைவனைத் தரிசித்து திருவருள் பெற வேண்டும் என பக்த அடியார்களை புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தினர் அழைக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg